சென்னை: பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 9-ந் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.மேலும், ரூ.1000 ரொக்கப்பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இந்த பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் ஆகிய 2.19 கோடி பேருக்கு வழங்கப்படும்.
மேலும், ரேஷன் கடையில் குடும்பத்தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கைவிரல் ரேகையை பதிவு செய்து தான் அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள். அதே நேரம் ரேஷன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது. ஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று இருக்கிறது. ஒரு நாளைக்கு 200 டோக்கன் வீதம் வழங்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்கள் பரிசு தொகுப்புகளை வாங்கி கொள்ளலாம். பொங்கல் பரிசு தொகுப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் புகார் செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்ணை அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.