day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு இன்றுமுதல் விநியோகம்: தமிழக அரசு

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு இன்றுமுதல் விநியோகம்: தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பத்தினர் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ரூ.2,430 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத்தை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் உரிய முறையில் விநியோகம் செய்து முடிக்க வேண்டிய முழு பொறுப்பும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உரியது என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் தொடங்கிவைத்த பின்னர், அனைத்து ரேஷன் கடைகளிலும் விநியோகம் தொடங்க வேண்டும், பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பரிசுத் தொகுப்பை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையொட்டி, ரேஷன் கடைகளுக்கு வரும் 13-ம் தேதி பணி நாள் என்றும், அதற்குப் பதில் வரும் 27-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

ஒரே நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் கூடுவதைத் தடுக்க தினமும் 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை வரை 94 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று காலை 9.15 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில், தீவுத்திடல் எதிரில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடியிருப்புதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விநியோகிக்கிறார்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்குகிறது. வரும் 12-ம் தேதி வரை டோக்கன் வரிசைப்படியும், 13-ம் தேதி விடுபட்டவர்களுக்கும் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!