day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தாக்கல் செய்த மனுவில், “ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா மற்றும் நாம் தமிழர் கட்சியின் சட்டத் துறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ் தாக்கல் செய்த மனுவில், “தேர்தல் பிரச்சாரத்தின்போது எங்கள் கட்சியினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்குகள் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “பணப் பட்டுவாடாவைத் தடுக்க கண்காணிப்பு குழுக்களும், பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாம் தமிழர் கட்சி தொடர்ந்த வழக்கில், தமிழக காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, “நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி பெற்றுவிட்டு பேரணி சென்றனர். பிளாஸ்டிக் பைப்புகளுக்குள் இரும்பு பைப்புகளைப் பொருத்தி வன்முறையில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையேயான மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பணப் பட்டுவாடா புகாரை பொறுத்தவரை, எந்த தேதியில், யார் பணம் கொடுத்தார்கள், பெற்றார்கள் என்பது தொடர்பான விவரங்கள் இல்லை. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டால் அவற்றில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, தேர்தலை நிறுத்தக் கோரி கண்ணன் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நாம் தமிழர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்குகளில், அதிமுக தொடர்ந்த வழக்கில் ஏற்கெனவே விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர்களின் புகார்களை பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!