தென் அமெரிக்க நாடான சிலியின் செர்ரோ தொலோலோ (Cerro Tololo) வட-தென் அமெரிக்க ஆய்வகத்தில் உள்ள பிளான்கோ எனப்படும் 4 மீட்டர் நீளம் கொண்ட தொலை நோக்கியின் கேமிராவை பயன்படுத்தி பூமி சுற்று வட்டப்பாதையில் நுழைந்து, மோதி பெரும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய மூன்று விண்கற்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமி மற்றும் வெள்ளி சுற்றுவட்டப் பாதைகளுக்கு இடையே இருந்த இந்த விண்கற்கள், சூரியனின் ஒளி பிரதிபலிப்பால் கண்டறிவது சவாலான பணியாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் பூமிக்கு மிக அருகே உள்ள 1.5 கிலோமீட்டர் அகலம் கொண்ட விண்கல்லுக்கு ஏ.பி.7 என பெயரிடப்பட்டுள்ளது.