விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னோடி வங்கி மூலம் நிதி உள்ளடக்கம் தொடர்பான மதிப்பாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி முன்னிலையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தலைமையில் நடைபெற்றது. மதிப்பாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுவது குறித்து விரிவாக ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர். பகவத் காரத், “இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் கரன்சி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.