திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள உமராபாத் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன். நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டை விட்டுவெளியேற்றிய புவனேஸ்வரனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்த நிலையில் உமராபாத்தில் உள்ள விவசாய கிணற்றில் சடலம் மிதப்பதாக உமராபாத் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து புவனேஸ்வரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து புவனேஸ்வரன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது புவனேஸ்வரனை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். உமராபாத் பகுதியில் கிணற்றில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.