டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக வெளியிடும் தகவலில் எது காமெடி எது சீரியஸ் என்று பகுத்துபார்க்க முடியவில்லை. அன்மையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப்போவதாக அறிவித்து பின்னர் தனது விருப்பத்தை மாற்றிக்கொண்டதாக அறிவித்தார். இதனால், தங்களுடைய பங்குகள் சரிந்து பாதிப்பை ஏற்படுத்தியதாக ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது வழக்கு தொடுக்க தயாராகி வருகிறது. இந்த நிலையில், பிரபல நட்சத்திர விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கமாக உள்ள இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்து அணியை வாங்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்திருந்தார். இந்த தகவல் உலகம் முழுவதும் பரவிய நிலையில், அதுகுறித்து எலான் மஸ்கிடம் டுவிட்டர் பயணர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, தான் கூறியது நகைச்சுவை என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், அது நீண்ட காலமாக டிவிட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் நகைச்சுவை என்றும், தான் எந்தவொரு அணியையும் வாங்கவில்லை என்றும் பதிலளித்தார்.