இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர கிரிக்கெட் வீரருமான மகேந்திரா சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தோனியின் இந்த நிறுவனம், சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. முன்னதாக இந்த நிறுவனம், ‘ரோர் ஆஃப் தி லயன்’ என்ற ஆவண படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டை தவிர பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் தோனி தற்போது தனது புது அத்தியமாக திரைத்துறையில் தடம் பதிக்கிறார்.