நடிகர் தர்மேந்திரா (86) 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் அண்மையில் உடல்நலம் தேறி வீடு திரும்பியுள்ளார். ஆனாலும், அவர் உடல் நிலை குறித்த வதந்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நடிகர் தர்மேந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே பேசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘நண்பர்களே, எப்போதும், நேர்மறையாகவே சிந்தியுங்கள். நேர்மறை எண்ணத்துடனே வாழுங்கள். இதனால் மட்டுமே வாழ்க்கையும் நேர்மறையாக இருக்கும். என்னைப்பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். ரசிகர்களாகிய நீங்கள் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களை நேசியுங்கள். அப்போதுதான், வாழ்க்கை அழகாக மாறும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Friends, With Love to You All 💕. pic.twitter.com/o4mXJSBDyF
— Dharmendra Deol (@aapkadharam) June 6, 2022