மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர் அபர்ணா பாலமுரளி. தமிழில் 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து சர்வம் தாள மயம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இதையடுத்து, சூரரை போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடித்தன் மூலம் தமிழகமெங்கும் பிரபலமான இவர் தீதும் நன்றும், வீட்ல விசேஷம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், உருவக்கேலிக்கு ஆளாக்கப்பட்டு வரும் அபர்ணா, “உடல் தோற்றத்துக்கும், திறமைக்கும் சம்மந்தம் இல்லை. தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களின் செல்வாக்குக்கும், தோற்றத்துக்கும் தொடர்பு இல்லை. திறமைதான் முக்கியம். ஒல்லியாக இருந்தால் தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று அவர் பேசியுள்ளார்.