தி கிரேட் மேன் என்ற நாவலை தழுவி அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ருஸ்ஸோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ருசோ) தற்போது தி கிரேட் மேன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளனர். இந்த திரைப்படம் நாளை (ஜூலை மாதம் 22ஆம் தேதி) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களுடன், நடிகர் தனுஷும் முக்கிய வேடத்தில் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் தி கிரேட் மேன் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தற்போது ஈடுபட்ட தனுஷ் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் வேட்டி சட்டையில் கலந்துகொண்டார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதனையடுத்து, தனுஷ் தி கிரேட் மேன் திரைப்பட இயக்குநர்களுடன் தமிழ் முறைப்படி வணக்கம் சொல்லும் புகைப்படத்தைப் பகிர்ந்து இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன் வணக்கம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.