தமிழகத்தில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில், டி.ஜி.பி. சைலேந்திர பாபு காணொலி வாயிலாக காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில், போதை பொருட்களை தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்க எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், மேலும், எந்த மாதியான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் தலைமை இயக்குநர் தாமரை கண்ணன், அனைத்து சரக ஐ.ஜி-க்கள், டி.ஐ.ஜி-க்கள், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.