44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த 28 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான பாதுகாப்பு பணிக்காக பல மாவட்டங்களில் இருந்து 4000 காவலர்கள் இரவு பகலாக பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிரியாணி விருந்து வைத்துள்ளார். இதையடுத்து, சிறப்பாக பணியாற்றிய காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டிய டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.