உலக புகழ்பெற்ற அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம், 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தாண்டு இறுதியில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இந்த திரைப்படத்தில் நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், பிரபல ஹாலிவுட் நடிகை கேட் வின்ஸ்லெட் நடித்துள்ளார். இந்நிலையில், இரண்டாம் பாக, வெளியாவதற்கு முன்பாக, 3டி தொழில் நுட்பத்தில் 4கே தரத்தில் மீண்டும் திரையங்குகளில் அவதார் முதல் பாகம் கடந்த 23ஆம் தேதி வெளியானது. மீண்டும் வெளியிடப்பட்ட இந்தபடம் இதுவரை உலகளவில் ரூ.350 கோடியும், இந்தியாவில் ரூ.7 கோடியும் வசூல் செய்துள்ளது.