டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் 4 மாடி கட்டிடத்தின் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8.50 மணி அளவில் அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தொழிலாளர்கள் அலறினார்கள். இதையொட்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 5 பேர் காயம் அடைந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.