பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே பாகிஸ்தானில் இருந்து இந்தியா எல்லை பகுதிக்குள் ஊடுருவிய டிரோன் விமானம் ஒன்றை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். இதனால் பழுதடைந்த டிரோனை அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் இருந்த கருப்பு துணி பையில் போதைப்பொருள் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர். முன்னதாக, சில நாட்களுக்கு முன் இதேபோல் பாகிஸ்தானில் இருந்து டிரோன் விமானம் வந்து அதை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.