இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இதையொட்டி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 34,598-ஆக குறைந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,45,99,466 ஆக உள்ளது. நேற்று ஒரேநாளில் 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து, இதுவரை மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,28,716-ஆக அதிகரித்துள்ளது.