இந்திய சினிமா செல்லுலாய்டில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதன் பின்னணியில் உருவான திரைப்படம் ‘தி லாஸ்ட் ப்ளிம் ஷோ’. குஜராத்தி திரைப்படமான தி லாஸ்ட் ப்ளிம் ஷோ 2023ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகர் ராகுல் கோலி, இரத்தப் புற்றுநோயான லுகேமியாவால் பாதிக்கப்பட்டு உயிரழந்தார். அவருக்கு வயது 17. இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுலுக்கு இரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.