ரெயில் பாதையில் உயர்மின்அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சென்னை, தாம்பரம் – கடற்கரை இடையே ரெயில் சேவை அரை மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தாம்பரம் – கடற்கரை இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.