மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், மும்பை நகரின் பத்ரா சாவல் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நில மோசடி நடந்திருப்பதாகவும் நிதி முறைகேடுகள் நடந்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதையொட்டி, சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தி அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று மும்பையில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சஞ்சய் ரெளத்க்கு செப்டம்பர் 5 வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.