பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியா் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் தேர்ச்சிப்பெற வேண்டிய நெட் தகுதித்தோ்வு செப்டம்பா் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தோ்வுக்கான ஹால்டிக்கெட் செப்டம்பா் 13ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. முன்னதாக, இந்தாண்டு சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுக்கான இணைய விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற்றது.