இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் மாதகணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியதையடுத்து கோத்தபய தப்பியோடி தலைமறைவானார். இந்த நிலையில், அவர் மாலத்தீவுக்கு சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து தங்கள் நாட்டில் இருந்து கோத்தபயவை வெளியேற்ற அந்த நாட்டு பிரதமர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கோத்தபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் அல்லது துபாய் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.