இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20, ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர்களில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி விளையாடுகிறது. இந்நிலையில், கொழும்பில் இரு அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் அசலங்கா 38, பதும் நிசங்கா 36 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்கள் ஹேசில்வுட் 4 , மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினர். 14 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 70 ரன்னும், ஆரோன் பின்ச் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மேலும், இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது.
defeat