நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று கொரோனா பாதிப்பு 21,566ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மேலும் புதிதாக 21,880 பேருக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,38,47,065ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,49,482ஆக உயர்ந்துள்ளது. இதனால், தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,25,930ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 21,219 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,31,71,653ஆக அதிகரித்துள்ளது.