இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 866 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 05 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்து 877 ஆக உள்ளது. நேற்று மட்டும் 41 போ் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 26 ஆயிரத்து 074 ஆக உயா்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து இன்று 18,148 போ் குணமடைந்த நிலையில், இதுவரை 4 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரத்து 670 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 390 பேர் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொண்ட நிலையில், நாட்டில் இதுவரை 202.17 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.