இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,72,980 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 47,379லிருந்து 46,216ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 5,28,403ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய பாதிப்பு 4,043ஆக இருந்த நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.