இந்தியாவில் மேலும் 9,520 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 87,311 ஆக உள்ளது. இந்த நிலையில், 12,875 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும், 41 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்ததையடுத்து மொத்த உயிரிழப்பு 5,27,597 ஆக உள்ளது. இதையடுத்து, இதுவரை 4,37,83,788 போ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.