இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 9 ஆயிரத்து 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை நாடு முழுவதும் 4 கோடியே 43 லட்சத்து 48 ஆயிரத்து 960 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்துடன், திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 648ஆக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரத்தை நெருங்கி இருந்த கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து தற்போது 10 ஆயிரத்துக்கும் குறைவாக சென்றுள்ளது. மேலும், நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 26 பேர் பலியானதை அடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 27 ஆயிரத்து 368ஆக உயர்ந்துள்ளது. இன்று 11 ஆயிரத்து 726 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து 4 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 218 பேர் மீண்டுள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 603 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 743 பேர் குணமடைந்துள்ளனர்.