புதுடெல்லி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தார். இதையடுத்து, நீரவ் மோடி இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி சென்று தலைமறைவானார். இதுதொடர்பாக சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.500 கோடி மதிப்புள்ள 39 சொத்துக்களை கைப்பற்ற அமலாக்கத்துறைக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.