சென்னை உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நகரங்களில் தனியாகவும், குடும்பத்துடனும் தங்கி வேலை செய்யும் பலர், பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் ரயில் போக்குவரத்து சேவையையே அதிகம் பேர் பயன்படுத்த முன்வருகின்றனர். ஒரே நேரத்தில் பலர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலுடன் கூட்ட நெரிசலும் உருவாகிறது. இதை கட்டுப்படுத்த ரயிவே நிர்வாகம் முடிவு செய்து ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவர சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதையொட்டி, குறிப்பிட்ட ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூர் – குருவாயூர் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் மற்றும் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்படுகிறது. அதுபோல தாம்பரம் -நாகர்கோவில் அந்தியோதயா ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.