கொழும்பு: இலங்கை சுகாதாரதுறை , கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுபாடுகளை விதித்திருந்தது.முக்கியமாக வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிளும் இலங்கை வருபவரகள் கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
தற்பொழுது இந்தவித கட்டுப்பாடுகளை இலங்கை சுகாதார துறை அமைச்சகம் அதிரடியாக நிக்கியுள்ளது.வெளிநாட்டினர் இலங்கை வந்தபின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனை, ஓட்டல் அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.