இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நேற்று ஒரு நாளில் நாடு முழுவதும் புதிதாக 13,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் புதிதாக 17,135 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,40,67,144ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,37,057ஆக உயர்ந்துள்ளது. இத்துடன் தொற்று பாதித்த 47 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்றுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 5,26,477ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 19,823 போ் குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,34,03,610ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 2,04,84,30,732 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமையான நேற்று மட்டும் 23,49,651 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.