இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 4 ஆயிரத்து 313 அதிகமாகும். நேற்று 14 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. கொரோனாவால் பாதித்து சிகிச்சைப் பெற்று வருபவர்களின் என்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 555 பேராக உள்ளது. 13 ஆயிரத்து 827 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 116ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 197.61 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.