நாடு முழுவதும் புதிதாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கத்துடன் நாளுக்கு நாள் மாறுதலுக்கு உண்டானாலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழல் காரணமாக அதிமுக கட்சியை சார்ந்தவர்கள் தினமும் பல்வேறு நபர்களை பொதுவெளியில் சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தொடர்ச்சியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வந்த அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளியானது. அவரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதேவேளையில், தற்போது அதிமுகவின் ஒருகிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.