கடந்த சில மாதங்களாக பல்வேறு காரணங்களால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்தது. இந்த நிலையில், தற்போது இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் சர்வதேச விலை வீழ்ச்சியடைந்து வருவதால், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை, சமையல் எண்ணெய் விலையை அதிகபட்ச சில்லரை விலையில் ரூ.15 குறைக்க வேண்டும் என்றும், விலை குறைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் முன்னணி சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சிலதினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த உணவு மற்றும் பொதுவினியோகத்துறை கூட்டத்தில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எண்ணெய் மீதான விலைக்குறைப்பு நடக்கும்போதெல்லாம் அதன் பயனை மக்களுக்கும் கிடைக்கச்செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.