தமிழகம் முழுவதும் உள்ள 27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த கல்லூரிகளுக்கு இணை பேராசிரியர்கள் 27 பேரை முதல்வராக பணி உயர்வு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 அரசு கலைக் கல்லூரிகளிலும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து பெற்று வழங்கிட வேண்டும் என்றும் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும், கல்லூரி கல்வி இணை இயக்குனரை சந்தித்து தேவையான அறிவுரைகளைப் பெற்று உடனடியாக அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.