சென்னை தேனாம்பேட்டையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில,
திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகுதான் படத்தை குறித்த விமர்சனங்களை எழுத வேண்டும்.
திரையரங்குகளில் படம் பார்த்தபின் கருத்து கேட்பதற்காக கேமராக்களை திரையரங்குகளுக்கு உள்ளே திரையரங்க உரிமையாளர்கள் அனுமதிக்கக் கூடாது.
திரைப்படங்களையும், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத் துறையினர் மீது தனிப்பட்ட முறையில் அவதூறாக செய்தி பரப்பும் ஊடகவியலாளர்களுக்கு பேட்டி தருவதைத் திரைத்துறையினர் தவிர்க்க வேண்டும்.