நேஷனல் ஹெரால்டு வழக்கில், வயநாடு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் கடந்த 13,14,15 மற்றும் 20 ஆகிய நான்கு நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். ராகுல் காந்தியிடம் ஒவ்வொரு நாளும் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாகவே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் கேள்விகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து ராகுல் காந்தி பதிலளிக்கும் பட்சத்தில் அவர் மீதான விசாரணை முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், 40 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்றும் அவர் மீதான விசாரணை தொடங்கி உள்ளது டெல்லி அமலாக்கத்துறை. முன்னதாக, ராகுல் மீதான விசாரணையைத்தொடங்கிய நாள் முதலே அமலாக்கதுறையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.