சென்னை, தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “கழகத் தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இதனால், தொண்டர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து நான் கூறுவது எங்கள் கழகத்தில் உள்ளவர்களை ஒன்றிணைந்து, பழைய அதிமுகவாகவே இருக்க வேண்டும். வரும் காலங்களில் வெற்றிகளை பெற வேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். கட்சியை மீட்டெடுக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். தமிழக மக்களுக்கு நன்றாக தெரிகிறது, யார் எட்டப்பர்கள் என்று. அதை மக்களிடமும் தொண்டர்களிடமும் விட்டு விடுகிறேன் அவர்களே முடிவெடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.