சென்னை: உலக நாடுகளையே உலுக்கிய கொரோனா இந்தியாவிலும் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை, மருந்து பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அரசின் தீவிர நடவடிக்கை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 918 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 350 பேர் வீடுகளில் தனிமைபடுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் நாடு முழுவதும் மத்திய அரசு உஷார்படுத்தி இருக்கிறது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் வாடத்தப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கொரோனா சற்று உயர்ந்தாலும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பயப்பட தேவை இல்லை. கொரோனா கட்டுப்பாட்டை ஒவ்வொரு வரும் கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை மீண்டும் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவிரைகளை வழங்கியுள்ளார்.