சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசை ஏற்கிறேன் என்ற வகையில் வேட்பாளர் ஒப்புதல் படிவம் தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்.பின்னர் அதிமுக வேட்பாளராக தென்னரசை முன்மொழிந்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கு படிவம் அனுப்பும் பணிகள் தொடங்கியது. இந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க தமிழ்மகன் உசேன் உத்தரவிட்டுள்ளார். இன்றைக்குள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் படிவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், நாளைக்குள் கையெழுத்திட்டு நாளை இரவு 7 மணிக்குள் அனுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார். தென்னரசை வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம், அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு என்று தமிழ்மகன் உசேன் உறுதி செய்துள்ளார்.