பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா எனப் பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகள் தலைப்பகுதி ஒட்டியப்படியே பிறந்துள்ளனர். இவர்கள் தலையில், மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டுசெல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் கைதேர்ந்த மருத்துவர் தலைமையிலான குழுவினர், விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளைப் பயன்படுத்தி பல மாத ஆராய்ச்சியின் மூலம் 27 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, குழந்தைகளின் இரண்டு தலைகளையும் வெற்றிகரமாக பிரித்துள்ளனர்.
மருத்துவ உலகில் இது மிகப்பெரிய சாதனை என்பதால் உலக அளவில் உள்ள பல்வேறு தரப்பினரும் இந்த அறுவை சிகிச்சை செய்து குழந்தைகளின் வாழ்க்கையை கடினமான பாதையில் இருந்து மீட்க உதவியாக இருந்த மருத்துவ குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.