காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை (பாரத் ஜோடோ யாத்) நேற்று மாலை கன்னியாகுமரியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து இரண்டாவது நாளான இன்று காலை அகத்தீஸ்வரம் கல்லூரியில் இருந்து நாகர்கோவில் நோக்கிய நடைப்பயணத்தை ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் தொடங்கியுள்ளனர். இதில், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். நடைப்பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் கட்சியினருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.