இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் 22ஆவது காமன்வெல்த் போட்டியில், பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலாவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் மோதியது. இந்த போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷெபாஃலி வெர்மா 48 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 52 ரன்களும் அதிகப்படியாக எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். இதையடுத்து, 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 157 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது.