இங்கிலாந்து நாட்டின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் உலகம் முழுவதிலிந்தும் 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். கோலாகலமாக நடைபெற்று வரும் இந்த விளையாட்டு போட்டிகளில், இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 22 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலம் என 52 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 11 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலம் என 34 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2ஆவது இடத்திலும், 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலத்துடன் நியூசிலாந்து 3ஆவது இடத்திலும் உள்ளன. தென் ஆப்ரிக்கா, கனடா ஆகிய நாடுகள் 4 மற்றும் 5 இடங்களில் உள்ளன.