மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்களை கண்காணிக்க குழு அமைக்க அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ஒவ்வொரு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் முதல்வர், துணை முதல்வர், தலைமை வார்டன் உள்ளிட்ட அனைத்து வார்டன்கள், மனநோய் சிகிச்சை பிரிவு துறைத்தலைவர், செவிலியர் கண்காணிப்பாளர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட சிறப்பு குழு அமைக்க உத்தரவு. ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த குழுவின் கூட்டம் நடத்தப்பட வேண்டும். வகுப்புகளுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருக்கும் மாணவர்கள், தேர்வுகளில் தொடர்ந்து தோல்வி அடையும் மாணவர்கள், மற்ற மாணவர்களுடன் சேராமல் விலகி இருக்கும் மாணவர்கள், மனநோய் பாதிப்பு அல்லது மருத்துவ சிகிச்சையில் இருக்கும் மாணவர்களை கண்காணிக்கப்பட வேண்டும்” என உத்தரவு வெளியாகியுள்ளது.