சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.96 குறைந்து ரூ.2,141-லிருந்து ரூ.2,045ஆக இன்று முதல் விற்பனையாகிறது. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை.