சென்னை, எழும்பூரில் உள்ள காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வானத்தில் சென்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுத்தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புதுக் கல்லூரி மாணவர் முகமது சதக்கத்துல்லா (18) என தெரியவந்துள்ளது. இதையடுத்து, விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.