சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கான ஹால்டிக்கெட், மார்ச் 27-ல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.