சீன நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான் மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்த நாட்டின் ஊடங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலநடுக்கத்தால், கன்சே திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு சிச்சுவானில் ரிக்டர் அளவுகோலில் 9ஆக பதிவான நிலநடுக்கத்தில் 90,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பாதுகாப்புக் கருதி நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர். மேலும், அந்த பகுதியில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் காணாமல் போன 25 பேரை தேடும் பணியும், மீட்புப் பணி தொய்வடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.